ஐபிஎல் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 2016ல் ஐபிஎல் டைட்டிலை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மீண்டும் டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வார்னர்னின் கேப்டன்சியில் தான் 2016ல் டைட்டிலை வென்றது. 

2018 சீசனுக்கு முன் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றதால், 2018ல் சன்ரைசர்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்திய கேன் வில்லியம்சன், அந்த சீசனில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். 2019 சீசனில் வார்னர் சன்ரைசர்ஸ் அணியில் ஆடினாலும் கூட, அவர் கேப்டனாக செயல்படவில்லை.

இந்நிலையில், அடுத்த சீசனுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் தூக்கியெறியப்பட்டு, வார்னரே மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த முடிவுக்கு காரணம், வில்லியம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கவே முடியாது என்பதுதான். 

ஏனெனில் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும். அப்படி பார்த்தால், வார்னர் - பேர்ஸ்டோ தொடக்க ஜோடியை பிரிக்க முடியாது. அதேபோல ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர்களான ரஷீத் கானும் முகமது நபியும் கண்டிப்பாக ஆடுவார்கள். எனவே ஆடும் லெவனில் வில்லியம்சனுக்கு வாய்ப்பில்லை. மூன்றாம் வரிசையில் மனீஷ் பாண்டே இறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், ரிதிமான் சஹா ஆகியோரும் அதன்பின்னர் ஷபாஸ் நதீம், விராட் சிங், பிரியம் கர்க் ஆகிய மூவரில் ஒருவரும் இறங்க வாய்ப்புள்ளது. 

ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக ரஷீத் கானும் முகமது நபியும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் சித்தார்த் கவுல் மற்றும் சந்தீப் சர்மா அல்லது கலீல் அகமது ஆகியோர் இறங்குவார்கள். 

Also Read - சுனில் ஜோஷி தேர்வின் பின்னணியில் தல தோனி..? வெளிவந்தது அதிரடி தகவல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), முகமது நபி, ஷபாஸ் நதீம்/ப்ரியம் கர்க்/விராட் சிங், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா/கலீல் அகமது.