மும்பையா? ஹைதராபாத்தா? யாருக்கு முதல் வெற்றி? மாஸ் காட்டப் போகும் அந்த கேப்டன் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 8ஆவது ஐபிஎல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

Sunrisers Hyderabad and Mumbai Indians Clash today in 8th IPL 2024 match at Hyderabad rsk

ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இது வரையில் இரு அணிகளும் மோதிய 21 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

SRH vs MI போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லையா? ஃபிட்னெஸ்க்கு அனுமதி மறுப்பு!

இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 235 ரன்கள் அடித்துள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளது. எம்.ஐயின் குறைந்தபட்ச ஸ்கோர் 87. இதே போன்று ஹைதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 96.

மும்பை இந்தியன்ஸ் (4-1):

கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுவே ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

பணம் சம்பாதிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

SRH vs MI அதிகபட்ச ரன்கள்:

டேவிட் வார்னர் (SRH) – 12 போட்டி – 524 ரன்கள்;

ஷிகர் தவான் (SRH) – 12 போட்டி – 436 ரன்கள்

கெரான் போலார்டு (MI) – 17 போட்டி – 431 ரன்கள்

SRH vs MI அதிகபட்ச விக்கெட்டுகள்:

புவனேஷ்வர் குமார் (SRH) – 13 இன்னிங்ஸ் – 18 விக்கெட்டுகள்

ஜஸ்ப்ரித் பும்ரா (MI) – 13 இன்னிங்ஸ் – 16 விக்கெட்டுகள்

லசித் மலிங்கா (MI) – 9 இன்னிங்ஸ் – 13 விக்கெட்டுகள்

வெற்றி யாருக்கு?

இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடிய போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 6 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், மாயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். இதே போன்று பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்கோ ஜான்சென், ஷாபாஸ் அகமது, மாயங்க் மார்கண்டே, பேட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர்.

MI வீரர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த திலக் வர்மா – வைரலாகும் வீடியோ!

மும்பை இந்தியன்ஸ் பலம்:

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, நமன் திர், டெவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். இதே போன்று பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷாம்ஸ் முலானி, பியூஸ் சாவ்லா, நமன் திர், ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மும்பை இந்தியன்ஸ் போட்டிகள்:

மார்ச் 24: GT vs MI, Ahmedabad 5th IPL Match,  MI Loss by 6 Runs

மார்ச் 27 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 01 – ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 07 – டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் – மும்பை – பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 11 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 14- சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 18 – பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மொகாலி – இரவு 7.30 மணி

ஏப்ரல் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – ஜெய்ப்பூர் – இரவு 7.30 மணி

ஏப்ரல் 27: டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – டெல்லி – பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 30: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – லக்னோ – இரவு 7.30 மணி

மே 03: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

மே 06: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

மே 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா – இரவு 7.30 மணி

மே 17: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios