Asianet News TamilAsianet News Tamil

5 முறை ஐபிஎல் கோப்பை ஜெயிச்சதுலாம் மேட்டரே இல்ல..! இந்திய டி20 கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

sunil gavaskar warns new india t20 captain rohit sharma
Author
Chennai, First Published Nov 10, 2021, 4:53 PM IST

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டார். அடுத்தாக நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார் ரோஹித் சர்மா.

இதையும் படிங்க - இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் பங்களிப்பு அளப்பரியது..! ரவி சாஸ்திரிக்கு விராட் கோலியின் ஃபேர்வெல் போஸ்ட்

விராட் கோலிக்கு  பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்படுவார் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும், நீண்டகால கேப்டனுக்கான நபராக கேஎல் ராகுல் இருப்பார் என்பதால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.

இதையும் படிங்க - IPL 2022 சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்; தோனிக்கு மாற்று வீரர் இவரா? சோஷியல் மீடியா மூலம் பரபரப்பை கிளப்பிய வீரர்

ஆனால் 5 முறை ஐபிஎல் டைட்டிலை ஜெயித்த கேப்டன், இந்திய அணியை வெள்ளைப்பந்து போட்டிகளில் வழிநடத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி அணியை அருமையாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் என்ற வகையிலும், கேப்டன்சி அனுபவத்தின் அடிப்படையிலும் ரோஹித் சர்மா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

sunil gavaskar warns new india t20 captain rohit sharma

இதையும் படிங்க - நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை மனதில் வைத்துத்தான், நீண்டகால தேர்வாக இல்லையென்றாலும் பரவாயில்லை என்று, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

இந்நிலையில், ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர்,  இந்திய அணியை வழிநடத்த ரோஹித் சர்மா தயாராகவே இருக்கிறார். ரோஹித் சர்மாவின்கேப்டன்சியில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் புதிய அத்தியாதத்தை தொடங்குகிறது.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

ரோஹித் சர்மா ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றிருக்கிறார். ஆனாலும் மாநில அணியையோ, லீக் அணிகளையோ வழிநடத்துவது வேறு; தேசிய அணியை வழிநடத்துவது வேறு. ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றதாலேயே, ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிப்பார் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - IPL 2022 ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி சாஸ்திரி..! எந்த அணிக்கு தெரியுமா..?

ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பை (2018) மற்றும் நிதாஹஸ் டிராபி ஆகிய தொடர்களில் வென்று கோப்பையை வென்றிருக்கிறது. எனவே ரோஹித் சர்மா வெறும் ஐபிஎல்லில் மட்டுமே கலக்கும் கேப்டன் என்றில்லாமல், இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios