Asianet News TamilAsianet News Tamil

18 பந்தில் 49 ரன்கள்.. இந்திய அணியின் பெரிய பிரச்னையே அவர் தான்..! சீனியர் வீரரை பற்றி கவலைப்படும் கவாஸ்கர்

சீனியர் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

sunil gavaskar speaks about the senior player who is big concern for team india ahead of t20 world cup
Author
First Published Sep 21, 2022, 11:45 AM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தும் கூட தோல்வியை தழுவியது. 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடிக்கவிடாமல் ஆஸ்திரேலியாவில் தடுக்கமுடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் இந்திய அணி சொதப்பியது. இந்திய அணியின் முக்கியமான ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 49 ரன்களும் வழங்கிய நிலையில் இருவருமே விக்கெட் வீழ்த்தவில்லை.

இதையும் படிங்க - ஆஸி.,க்கு எதிராக 208 ரன்கள் அடித்தும் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்..! ரவி சாஸ்திரி விளாசல்

19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 16 ரன்களை வழங்கினார். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. இதையே தான் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக செய்துவருகிறார். அது இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.

ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 19வது ஓவரில் அதிக ரன்களை வழங்கினார் புவனேஷ்வர் குமார். பாகிஸ்தானுக்கு எதிராக 19வது ஓவரில் 19 ரன்களை வழங்கிய புவனேஷ்வர் குமார், இலங்கைக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் 14 ரனக்ளை வழங்கி 2 போட்டிகளிலும் 19வது ஓவரிலேயே எதிரணிகளின் வெற்றியை உறுதி செய்தார் புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் அதேதான் நடந்தது.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான பவுலராக புவனேஷ்வர் குமார் பார்க்கப்படும் நிலையில், டெத் ஓவர்களில் அவரது தொடர்ச்சியான மோசமான பவுலிங் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க - ரோஹித், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் அவர்..! இனிமேல் அதைப்பற்றி பேசாதீங்க.. கம்பீர் நறுக்

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், மொஹாலியில் பனியெல்லாம் கிடையாது. எனவே அதை காரணமாக சொல்லமுடியாது. இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை. 19வது ஓவர் தான் இந்திய அணிக்கு தொடர்ந்து பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. புவனேஷ்வர் குமார் ஒவ்வொரு முறையும் 19வது ஓவரில் தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்குகிறார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், புவனேஷ்வர் குமார் கடைசியாக 3முறை வீசிய 19வது ஓவரில் மொத்தம் 18 பந்தில் 49 ரன்களை வழங்கியிருக்கிறார். ஒரு பந்துக்கு 3 ரன் வீதம் வழங்கியிருக்கிறார். அவரது அனுபவத்திற்கு இது மிக அதிகம். இதுதான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருக்கிறது என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios