Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND விராட் கோலி செய்யும் தவறு இதுதான்..! மிகச்சரியாக சுட்டிக்காட்டிய கவாஸ்கர்

விராட் கோலி பேட்டிங்கில் செய்யும் தவறு என்னவென்று சுட்டிக்காட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

sunil gavaskar points out what mistake virat kohli has been doing in test cricket
Author
Oval, First Published Aug 30, 2021, 9:54 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் ஸ்கோர் செய்யமுடியாமல் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனின் பந்தில் கோல்டன் டக் அவுட்டான கோலி, 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 20 ரன்களும் அடித்தார். 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் ஆண்டர்சனின் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் 55 ரன்கள் அடித்தார்.

2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தாலும், அவரது முழு பணியை அந்த இன்னிங்ஸில் செய்து கொடுக்கவில்லை. மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், அதிலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் ஆட்டமிழந்தார். கவர் ஷாட் ஆடமுயன்று விக்கெட்டின் பின்பக்கத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில், கோலி அவரது பேட்டிங்கில் செய்யும் தவறை சுட்டிக்காட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர். கோலி உடலுடன் ஒட்டியவாறு பேட்டை வைத்து ஆடாமல், உடலை விட்டு தனியாக பேட்டை மட்டும் விடுவதுதான் அவர் விக்கெட்டுக்கு பின்பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க காரணம் என்று கூறியுள்ளார். அதனால் ஷாட் செலக்‌ஷனில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios