Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய 2 பலவீனங்கள்..! சுட்டிக்காட்டிய சுனில் கவாஸ்கர்

ஐபிஎல்லின் 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான 2 பலவீனங்களை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

sunil gavaskar points out weaknesses of mumbai indians in ipl 2020
Author
UAE, First Published Sep 17, 2020, 7:31 PM IST

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று, வெற்றிகரமான அணியாக கோலோச்சுகிறது. கடந்த முறை டைட்டிலை வென்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, க்ருணல் பாண்டியா, மலிங்கா என கோர் டீம் வலுவாக இருப்பதுதான் அந்த அணி ஐபிஎல்லில் கோலோச்ச முக்கியமான காரணம். இந்த சீசனில் மலிங்கா ஆடவில்லை. அவர் ஆடவில்லையென்றாலும், அந்த அணிக்கு பாதிப்பில்லாத அளவிற்கு வலுவான வீரர்களை பெற்றுள்ளது. 

sunil gavaskar points out weaknesses of mumbai indians in ipl 2020

பேட்டிங், ஆல்ரவுண்டர், ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்து வகையிலும் நல்ல கலவையிலான சிறந்த மற்றும் வலுவான அணியாகவே எப்போதுமே திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ். ஆனால் இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனுபவமான ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலவீனம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெயில் அதிகம் என்பதால், ஆடுகளங்கள் வறண்டு, தொடரின் 2வது பாதியில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறும். எனவே அனுபவம் வாய்ந்த தரமான ஸ்பின் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ள சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளுக்கு அது சாதகமாக அமையும். மும்பை இந்தியன்ஸிடம் அப்படி வலுவான ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது கண்டிப்பாக பெரிய பாதிப்பாக அமையும்.

sunil gavaskar points out weaknesses of mumbai indians in ipl 2020

அனுபவமான ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாததும், மிடில் ஆர்டர் பேட்டிங்கும் அந்த அணியின் பலவீனம என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், அனுபவமான ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம். அதுமட்டுமல்லாது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கும் பலவீனமாகத்தான் உள்ளது. 4 மற்றும் 5ம் வரிசைகளில் யாரை இறக்கப்போகிறார்கள் என்பதை மும்பை இந்தியன்ஸ் உறுதி செய்ய வேண்டும்.

sunil gavaskar points out weaknesses of mumbai indians in ipl 2020

குயிண்டன் டி காக், ரோஹித் சர்மாவுடனோ அல்லது சூர்யகுமார் யாதவுடனோ தொடக்க வீரராக இறங்குவார். எனவே இஷான் கிஷான் 4ம் வரிசையில் இறங்கலாம்; இஷான் கிஷான் தொடக்க வீரராகக்கூட இறங்கலாம். அப்படியென்றால், ஹர்திக் பாண்டியா 4ம் வரிசையிலும் பொல்லார்டு 5ம் வரிசையிலும் இறங்கலாம். ஒருவேளை அப்படி நடக்கவில்லையென்றால், யார் 4ம் வரிசையில் இறங்குவது என்பது பெரிய கேள்வி என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், பும்ரா, டிரெண்ட் போல்ட், மிட்செல் மெக்லனகன், தவால் குல்கர்னி, ஷ்ரெஃபேன் ரூதர்ஃபோர்டு, கிறிஸ் லின், சவுரப் திவாரி, திக்விஜய் தேஷ்முக், ப்ரின்ஸ் பல்வாண்ட் ராய் சிங், மோசின் கான், ஜெயந்த் யாதவ், ஆதித்ய தரே, அன்மோல்ப்ரீத் சிங், அனுகுல் ராய்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios