Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 அவனை நீங்க எந்த பேட்டிங் ஆர்டரில் இறக்குனாலும் வேஸ்ட் தான்..! கேகேஆரை விளாசிய கவாஸ்கர்

சுனில் நரைனை கேகேஆர் அணி எந்த பேட்டிங் ஆர்டரில் இறக்கினாலும் வீண் தான் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

sunil gavaskar opines sunil narine at 4 or 5 whatever is the waste of space
Author
Chennai, First Published Apr 30, 2021, 7:49 PM IST

ஐபிஎல் 13வது சீசனே சரியாக அமையாத கேகேஆர் அணிக்கு, நடப்பு சீசனான 14வது சீசனும் படுமோசமாக அமைந்துள்ளது. ஒயின் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி, இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் வெறும் இரண்டே வெற்றிகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

லீக் சுற்று பாதி முடிந்துவிட்ட நிலையில், கேகேஆர் அணி பரிதாப நிலையில் உள்ளது. இந்த சீசனில் அந்த அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசமாக அமைந்துள்ளது. மோர்கன், ரசல், சுனில் நரைன், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக், ராணா, திரிபாதி, கம்மின்ஸ் என பல சிறந்த வீரர்கள் கேகேஆர் அணியில் இருந்தாலும், ஒரு அணியாக அந்த அணி ஆடுவதாக தெரியவில்லை.

முதல் போட்டியிலிருந்தே மந்தமான தொடக்கம், சொதப்பலான மிடில் ஆர்டர் பேட்டிங், பவுலிங்கில் நிலைத்தன்மை இல்லாதது என செய்த தவறுகளையே திரும்ப திரும்ப அந்த அணி செய்துவருகிறது. செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளை சரிசெய்துகொள்ளவேயில்லை.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியிலும் தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணாவும் கில்லும் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுக்கவில்லை. கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறி 38 பந்தில் 43 ரன்கள் அடித்து கில் ஆட்டமிழந்தார். மோர்கன், நரைன் ஆகியோர் டக் அவுட். ரசல் 45 ரன்கள் அடித்தார். அந்த அணியின் பேட்டிங் படுமோசமாக சொதப்பிவருகிறது. ஏதாவது ஒரு போட்டியில் சொதப்பினால் பரவாயில்லை. அனைத்து போட்டிகளிலுமே கேகேஆர் அணி சொதப்புவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

டெல்லிக்கு எதிரான போட்டியில் பவுலிங்கும் படுமோசம். தொடக்க ஜோடியான பிரித்வி ஷா - தவான் ஜோடியை பிரிப்பதற்குள்ளாகவே போட்டி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விக்கெட்டுகளை வீழ்த்தவும் முடியாமல், ரன்னையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது கேகேஆர் அணி. அதனால் டெல்லி கேபிடள்ஸ் அணி 155 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றுவிட்டது.

லாக்கி ஃபெர்குசன், டிம் சேஃபெர்ட் மாதிரியான வீரர்கள் பென்ச்சில் இருந்தும் கூட, தொடர் தோல்விகளுக்கு பிறகும் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே காம்பினேஷனுடன் ஆடி மீண்டும் மீண்டும் தோற்பது பலருக்கும் வியப்பாகவே இருக்கிறது.

இந்நிலையில், கேகேஆர் அணி குறித்து பேசிய கவாஸ்கர், உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், கேகேஆர் அணியில் நிறைய கிளாஸ் பேட்ஸ்மேன்கள் கிடையாது. ஷுப்மன் கில், மோர்கன் ஆகிய இருவரும் மட்டுமே கிளாஸ் பேட்ஸ்மேன்கள். தினேஷ் கார்த்திக்கை இன்னும் மேலே இறக்கலாம்.

5 அல்லது 6ம் வரிசையில் ரசல் இருக்கிறார். எனவே தினேஷ் கார்த்திக்கை மேலே இறக்கலாம். 3ம் வரிசையில் ராகுல் திரிபாதி ஆடுகிறார். 4 அல்லது 5ம் வரிசையில் சுனில் நரைன் ஆடுகிறார். சுனில் நரைன் எந்த வரிசையில் இறங்கினாலும், அது வேஸ்ட் தான். சுனில் நரைனை கண்டிப்பாக அணியில் வைத்தே தீருவோம் என்றால், அவரை டாப் ஆர்டரில் அனுப்ப வேண்டும். டாப் ஆர்டரில் அவருக்கு சில ஷாட்டுகள் கனெக்ட் ஆனால் போதுமானது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios