Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் வேண்டாம்.. இந்த பையனை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிங்க..! காரணத்துடன் சொல்லும் கவாஸ்கர்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், அடுத்த கேப்டன் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

sunil gavaskar opines rishabh pant will be appoint as next test captain of team india and not rohit sharma
Author
Chennai, First Published Jan 16, 2022, 4:39 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுதான் நடக்கும்.

இந்நிலையில், டெஸ்ட் கேப்டன்சி குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், என்னை கேட்டால் நான் ரிஷப் பண்ட்டைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பேன். அதற்கு ஒரே காரணம் என்னவென்றால், கேப்டன்சி பொறுப்பு ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை மேம்படுத்தும். ஐபிஎல்லில் ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிக்கொண்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினார். அதன்பின்னர் தான் ரோஹித் பொறுப்புடன் பேட்டிங் ஆடினார். 30, 40, 50களில் ஆட்டமிழந்து கொண்டிருந்த ரோஹித் சர்மா, அதன்பின்னர் சதம், 150, 200 என பெரிய இன்னிங்ஸ்களை ஆட ஆரம்பித்தார். அதேபோலவே கேப்டன்சி பொறுப்பு ரிஷப் பண்ட்டையும் பொறுப்புடன் பேட்டிங் ஆடவைக்கும். கேப்டன்சி ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை மேம்படுத்தி, நல்ல தொடக்கங்களை பெரிய இன்னிங்ஸாக அவரை மாற்றவைக்கும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios