Asianet News TamilAsianet News Tamil

சான்ஸே இல்ல.. அஷ்வின் விவகாரத்தில் கட் அண்ட் ரைட்டா பேசிய கவாஸ்கர்

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

sunil gavaskar believes ashwin has no chance to comeback to team india for playing in white ball cricket
Author
Chennai, First Published Feb 21, 2021, 7:56 PM IST

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் வருகைக்கு பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்க்கப்படவேயில்லை. 

111 ஒருநாள் போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 46 டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆடியதுதான் கடைசி. அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படவேயில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி ஸ்பின்னராக திகழ்ந்து, விக்கெட்டுகளை வீழ்த்தி குவிப்பதுடன் சாதனைகளையும் படைத்துவருகிறார்.

ஆஸி., மண்ணில் அசத்திய அஷ்வின், இங்கிலாந்துக்கு எதிராகவும் அசத்திவரும் நிலையில், அவரை மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் சேர்ப்பது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதால் அது விவாதக்களமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்,  இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அஷ்வின் கம்பேக்கிற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய ஆல்ரவுண்டர்கள் இருப்பதால், அஷ்வினுக்கு அணியில் இடம் இல்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios