Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND விராட் கோலி இந்த ஒரு விஷயத்தை மட்டும் திருத்திக்கணும்..! லெஜண்ட் கவாஸ்கர் அறிவுரை

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், அவருக்கான அறிவுரையை வழங்கியுள்ளார் முன்னாள் லெஜண்ட் வீரர் சுனில் கவாஸ்கர்.
 

sunil gavaskar advises virat kohli to concentrate on his shot selection
Author
London, First Published Aug 29, 2021, 4:49 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் ஸ்கோர் செய்யமுடியாமல் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனின் பந்தில் கோல்டன் டக் அவுட்டான கோலி, 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 20 ரன்களும் அடித்தார். 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் ஆண்டர்சனின் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் 55 ரன்கள் அடித்தார்.

2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தாலும், அவரது முழு பணியை அந்த இன்னிங்ஸில் செய்து கொடுக்கவில்லை. மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், அதிலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் ஆட்டமிழந்தார். கவர் ஷாட் ஆடமுயன்று விக்கெட்டின் பின்பக்கத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலி உடனடியாக சச்சின் டெண்டுல்கரை தொடர்புகொண்டு, தனது தவறு என்னவென்று அறிந்துகொண்டு அதை எப்படி திருத்திக்கொள்வது என்ற ஆலோசனையை பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த கவாஸ்கர், கோலி அவரது ஷாட் செலக்‌ஷனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி இந்த தொடரை வெல்ல வேண்டுமென்றால், கோலி நன்றாக ஆட வேண்டியது அவசியம்.

அந்தவகையில், கோலி குறித்து பேசியுள்ள கவாஸ்கர், ஷாட் செலக்‌ஷன் தான் கோலியின் பிரச்னையாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் 6500 ரன்களுக்கு மேல் க்ரீஸுக்கு வெளியே நின்று பேட்டிங் ஆடித்தான் அடித்துள்ளார் கோலி. எனவே கோலி அவரது பேட்டிங்கில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியதில்லை. அவரது ஷாட் செலக்‌ஷனில் கவனம் செலுத்தினால் போதும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios