தேசியக் கொடியை குப்பை தொட்டியில் வீசிய காவல் உதவி ஆய்வாளர்; காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!
சென்னை சேப்பாக்கத்தில் இந்திய தேசியக் கொடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேசியக் கொடியை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் அதனை குப்பைத் தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது.
இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியா மட்டும் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 5 போட்டிகளில் விளையாடி4ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 2ஆவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4ஆவது இடத்திலும் உள்ளன.
எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைக்கு சொந்தக்காரர் பிஷன் சிங் பேடி – 1560 விக்கெட்டுகள்!
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!
ஆனால், அதையும் மீறி ரசிகர்கள் எடுத்து வந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜன், தேசியக் கொடியை பறிமுதல் செய்து குப்பைத் தொட்டியில் வீசியிருக்கிறார். இச்சம்பவப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குப்பைத் தொட்டியிலிருந்து இந்திய தேசியக் கொடியை எடுத்து போலீஸ் வாகனத்தில் வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தான், சென்னை சேப்பாக்கத்தில் தேசியக் கொடியை அவமதித்த காவல் உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Asian Para Games Hangzhou: 5000 மீ பிளைண்ட் தடகளப் போட்டியில் இந்தியாவின் அங்கூர் தாமாவிற்கு தங்கம்!
மேலும், #DMK_HatesIndianFlag என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று ரசிகர்கள் முழக்கமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உயரம் தாண்டுதல் T64 பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – பிரவீன் குமார் 2.02 மீ உயரம் தாண்டி சாதனை!