ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித் மற்றும் லபுஷேனை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. லபுஷேன் 48 ரன்கள் அடிக்க, ஸ்மித் 80 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் பேட்டிங் ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் டென்லி 94 ரன்களையும் பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களையும் குவித்தனர். பட்லர் அதிரடியாக ஆடி 47 ரன்கள் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் அடித்துள்ளது. 

இதன்மூலம் மொத்தமாக 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. இரண்டாவது இன்னிங்ஸில் கிறிஸ் வோக்ஸின் விக்கெட்டை மிட்செல் மார்ஷ் வீழ்த்தினார். வோக்ஸ் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். வோக்ஸின் கேட்ச்சை அபாரமாக தாவிப்பிடித்தார் ஸ்மித்.

வோக்ஸ் அடித்த பந்து, எட்ஜ் ஆகி செல்ல, அதை இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற ஸ்மித், அபாரமாக ஒற்றை கையில் கேட் செய்தார். இந்த ஆஷஸ் தொடரின் சிறந்த கேட்ச் இதுதான். அந்த வீடியோ இதோ..