உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் குல்டர்நைல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் பெஹ்ரெண்டோர்ஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், ஸ்மித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்.  

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), திரிமன்னே, குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, மிலிண்டா சிரிவர்தனா, உடானா, லசித் மலிங்கா, நுவான் பிரதீப்.