உலகக் கோப்பையின் 8ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியைப் பொறுத்த வரையில் கசுன் ரஜீதாவிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்‌ஷனா அணியில் இடம் பெற்றுள்ளார்.

England vs Bangladesh: மொயீன் அலி இல்லை – டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்!

ஆசிய கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தீக்‌ஷனா விலகினார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் தீக்‌ஷனா இடம் பெற்றுள்ளார். இதே போன்று பாகிஸ்தான் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் ஃபகர் ஜமானுக்குப் பதிலாக அப்துல்லா ஷபீக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Shubman Gill: ஒரு இரவு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை – டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட சுப்மன் கில் ஹோட்டலில் ஓய்வு!

பாகிஸ்தான்:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப், ஹசன் அலி.

இலங்கை:

தசுன் ஷனாகா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்/ துணை கேப்டன்), பதும் நிசாங்கா, குசால் ஜனித் பெரேரா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, தில்ஷன் மதுஷங்கா.

England vs Bangladesh: முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை!

ஏற்கனவே நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 156 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் 92 போட்டிகளிலும் இலங்கை 59 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.

Shubman Gill: சுப்மன் கில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதி – பாகிஸ்தான் போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உலகக் கோப்பையில் மட்டும் 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் 7 போட்டியில் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஆனால், இலங்கை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

இலங்கை – பாகிஸ்தான் உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ்:

1975 - 192 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – நாட்டிங்காம்

1983 - 50 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - ஸ்வான்சீ

1983 - 15 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - லீட்ஸ்

1987 - 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – ஹைதராபாத்

1987 - 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – ஃபைசலாபாத்

1992 – 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – பெர்த்

2011 - 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - கொழும்பு

2019 – மழையால் போட்டி ரத்து – பிரிஸ்டல்

முந்தைய சாதனைகளின் படி இன்று நடக்கும் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NED vs NZ: நியூசிலாந்திடம் சரண்டரான நெதர்லாந்து – 2ஆவது முறையாக சாண்ட்னர் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!