உலகக் கோப்பை தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை டைட்டில் வென்றுள்ளது.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான அட்டவணையும் வெளியானது. இந்தியா உள்பட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி நடந்தது. இதில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

பும்ரா வந்துட்டா ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் – முகமது கைஃப்!

இந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது. அதே போன்று ஜிம்பாப்வே அணியும், ஸ்காட்லாதிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில், தான் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை குவாலிஃபையரின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

ரோகித் சர்மா கேப்டன்ஷியில் அணியில் ஒற்றுமை இல்லை – சுனில் கவாஸ்கர்!

அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், சஹான் அரச்சிகே 57 ரன்களும், குசால் மெண்டிஸ் 43 ரன்களும், எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் நெதர்லாந்து அணியில் வேன் பீக், ரியான் க்ளென், விக்ரம்ஜித் சிங், ஜூல்பிகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியின் மூலமாக பதிலடி கொடுத்த இங்கிலாந்து; கடைசி நேரத்தில் கை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்!

இதையடுத்து 234 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட நெதர்லாந்து அணி ஆடியது. இதில், தொடக்க வீரர் விக்ரம் சிங் 13 ரன்களும், மேக் ஓ தாவுத் 33 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக நெதர்லாந்து 23.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை குவாலிஃபையர் தொடரின் டிராபியை இலங்கை அணி கைப்பற்றியது. எனினும், தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு 10ஆவது அணியாக தகுதி பெற்றது.