டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தசுன் ஷனாகா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணி:

தசுன் ஷனாகா(கேப்டன்), தனஞ்செயா டி சில்வா(துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, காமிண்டு மெண்டிஸ், குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, லஹிரு மதுஷங்கா, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப், மஹீஷ் தீக்‌ஷனா, பிரவீன் ஜெயவிக்ரமா.

ரிசர்வ் வீரர்கள் - லஹிரு குமாரா, புலினா தரங்கா, பினுரா ஃபெர்னாண்டோ, அகிலா தனஞ்செயா.