பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார் இலங்கை முன்னாள் ஜாம்பவான் ஜெயசூரியா.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையே எல்லை மீறி உச்சத்தை தொட்டதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இலங்கை பெரும் பொருளாதார பிரச்னையை எதிர்கொண்டுள்ளது.
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய ஆஸ்திரேலிய அணி கூட, அந்த அணி மற்றும் வீரர்கள் பெற்ற பரிசுத்தொகையை அப்படியே இலங்கைக்கு வழங்கிவிட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் அனைத்து பரிசுத்தொகையையும் வழங்கினர்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்
இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பத்தில் இலங்கையில் நடத்துவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், ஆசிய கோப்பை தொடரை நடத்தமுடியாது என்று கூறிவிட்டது.
அதனால் தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களுக்கு சென்றுவரும் இலங்கை முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டரும் முன்னாள் கேப்டனுமான சனத் ஜெயசூரியா, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க - ZIM vs IND: ஆடாத வீரர்களுக்கு கடைசி ODI-யில் வாய்ப்பு! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச ஆடும் லெவன்
இந்த சந்திப்பு குறித்து டுவீட் செய்த ஜெயசூரியா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆகியோரை சந்தித்தது பெருமையாக இருக்கிறது. இவ்வளவு குறுகிய இடைவெளியில் நான் கேட்டதற்கு இணங்க என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. இலங்கை கிரிக்கெட் குறித்த முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசினோ என்று ஜெயசூரியா பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்ற ஜெயசூரியா,அந்த அனுபவம் குறித்து டுவீட் செய்திருந்தார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை நேரில் சந்தித்து பேசினார்.
