Asianet News TamilAsianet News Tamil

இலங்கை கிரிக்கெட்டின் ஸ்மார்ட் மூவ்..! அணியை வலுப்படுத்த அடுத்தடுத்து களமிறக்கப்படும் முன்னாள் ஜாம்பவான்கள்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக, அந்த அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

sri lanka cricket board appoints chaminda vaas as bowling coach for west indies tour
Author
Sri Lanka, First Published Feb 19, 2021, 5:33 PM IST

ரணதுங்கா கேப்டன்சியில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை 1996ம் ஆண்டு வென்ற இலங்கை அணி, ஜெயசூரியா, அட்டப்பட்டு, அரவிந்த் டி சில்வா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் கெத்தாக வலம்வந்த இலங்கை அணி, இப்போது படுமோசமான நிலையில் உள்ளது.

2007, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைகளில் ஃபைனலுக்கு முன்னேறி, கோப்பையை இழந்த இலங்கை அணி, 2014ல் டி20 உலக கோப்பையை வென்றது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்ந்த இலங்கை அணி, இப்போது கோமாவில் உள்ளது எனலாம். ஏனெனில் அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசைகளில் முறையே 6, 7  மற்றும் 8வது இடங்களில் உள்ளது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க, இலங்கை கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ள ஆல்டைம் சிறந்த வீரர்களான அரவிந்த் டி சில்வா, சங்கக்கரா, முத்தையா முரளிதரன், ரோஷன் மஹனாமா ஆகியோர் அடங்கிய புதிய கமிட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்தது.

இந்நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இலங்கை அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. இந்நிலையில், அந்த சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 355 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் சமிந்தா வாஸ், 2013லிருந்து 2015 வரை இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராகவும், அதன்பின்னர் அயர்லாந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். எனவே வாஸுக்கு பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பு ஒன்றும் புதிதல்ல. அவரது பவுலிங் பயிற்சியின் கீழ் இலங்கை அணியின் பவுலிங் தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios