ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனலுக்கு பாகிஸ்தானும் இலங்கையும் தகுதிபெற்றுள்ள நிலையில், ஃபைனலுக்கான முன்னோட்டமாக கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.

ஃபைனல் நடக்கும் அதே துபாயில் தான் இந்த போட்டியும் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்

இதையும் படிங்க கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் காயமடைந்த ஜடேஜா..! ரோஹித், டிராவிட் செம கடுப்பு.. பிசிசிஐ அதிருப்தி

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷான் மதுஷங்கா.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், உஸ்மான் காதிர், முகமது ஹஸ்னைன்.


முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்களை எளிதாக ஸ்கோர் செய்யவிடாமல் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் இலங்கை பவுலர்கள். ரிஸ்வான் 14 பந்தில் 14 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அறிமுக பவுலர் மதுஷன் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

ஃபகர் ஜமான் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாபர் அசாம் (30), இஃப்டிகார் அகமது(13), ஆசிஃப் அலி(0) ஆகிய மூவரையுமே ஹசரங்கா வீழ்த்தினார். நவாஸ் 18 பந்தில் 26 ரன்கள் அடித்தார். இலங்கையின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 19.1 ஓவரில் 121ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

122 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸ், 3ம் வரிசை வீரர் தனுஷ்கா குணதிலகா ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, தனஞ்செயா டி சில்வா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ராஜபக்சா 24 ரன்களும், கேப்டன் ஷனாகா 21 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - அப்படினா நான் வெளியே உட்காரணுமா..? கோலி குறித்த நிருபரின் கேள்வியால் கடுப்பான ராகுல்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த பதும் நிசாங்கா, 55 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை இலங்கைக்கு வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். நிசாங்காவின் பொறுப்பான பேட்டிங்கால் 17 ஓவரில் இலங்கை அணி இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஃபைனலுக்கு முன், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி இலங்கை அணிக்கு பெரும் உத்வேகத்தை கொடுக்கும்.