டி20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
டி20 உலக கோப்பையில் அயர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இலங்கை - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி:
குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, ஆஷன் பண்டாரா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, பினுரா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 25 பந்தில் 34 ரன்கள் அடித்தார். ஹாரி டெக்டார் 42 பந்தில் 45 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையும் படிங்க - முடியாததை முடித்து காட்டியிருக்கார்.. இப்படி ஒரு வீரரை நான் பார்த்ததே இல்ல! இந்திய வீரருக்கு பாண்டிங் புகழாரம்
129 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் தொடக்க வீரராக இறங்கிய தனஞ்செயா டி சில்வா 31 ரன்கள் அடித்தார். சாரித் அசலங்கா அடித்து ஆடி 22 பந்தில் 31 ரன்கள் அடித்தார். குசால் மெண்டிஸ் 43 பந்தில் 68 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 15வது ஓவரில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.