ஆசிய கோப்பை தொடரில் இன்று நடக்கும் முதல் போட்டியில் களமிறங்கும் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை(ஆகஸ்ட் 28) துபாயில் நடக்கிறது.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

இன்று நடக்கும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷான் மதுஷங்கா, அசிதா ஃபெர்னாண்டோ.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலா அந்த பையனைத்தான் எடுத்திருக்கணும்! பாக்.,முன்னாள் வீரர் பளீச்

உத்தேச ஆஃப்கானிஸ்தான் அணி:

ரஹ்மதுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா சேஸாய், இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், உஸ்மான் கனி, முகமது நபி (கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், ரஷீத் கான், ஃபரீத் அகமது, முஜீபுர் ரஹ்மான்.