Asianet News TamilAsianet News Tamil

RCB vs SRH: 8வது ஓவரிலேயே இலக்கை அடித்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் 2ம் இடம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 69 ரன்கள் என்ற எளிய இலக்கை 8வது ஓவரில் அடித்து சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

srh beat rcb by 9 wickets in ipl 2022
Author
Mumbai, First Published Apr 23, 2022, 10:12 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீசா சுஜித், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

ஆர்சிபி அணி:

அனுஜ் ராவத், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான ஃபாஃப் டுப்ளெசிஸ், அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரையுமே இன்னிங்ஸின் 2வது ஓவரிலேயே வெளியேற்றினார் மார்கோ யான்சென்.  அதன்பின்னர் எழவே முடியாமல் விழுந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல்லை 12 ரன்னில் நடராஜன் வீழ்த்தினார். பிரபுதேசாயை 15 ரன்னில் வீழ்த்திய ஜெகதீஷா சுஜித், தினேஷ் கார்த்திக்கை டக் அவுட்டாக்கி அனுப்பினார். மேக்ஸ்வெல்லை வீழ்த்திய நடராஜன், அதன்பின்னர் ஹர்ஷல் படேல்(4) மற்றும் ஹசரங்கா (8) ஆகிய இருவரையும் வீழ்த்த, 16.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆர்சிபி அணி.

69 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 28 பந்தில் 47 ரன்கள் அடித்தார். சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 5 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அபிஷேக் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த திரிபாதி சிக்ஸர் அடித்து முடித்து கொடுத்தார். 8 ஓவர்களில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios