சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. 

முதல் 2 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. சன்ரைசர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என்பதால், அவருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான அவசியம் இல்லை. எனவே அந்த அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சாம் பில்லிங்ஸ், ராசிக் சலாம் , பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.