இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், 2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். அதன்பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்திலும் உற்சாகத்திலும் உள்ளார் ஸ்ரீசாந்த். 

ரஞ்சியில் கேரள அணிக்காக ஆடவுள்ளார். இந்திய அணிக்கும் ஐபிஎல்லிலும் மீண்டும் ஆடும் எதிர்பார்ப்பில் உள்ளார் ஸ்ரீசாந்த். தன் மீதான தடை முடிந்ததையடுத்து, மீண்டும் கிரிக்கெட் களம் காணவுள்ளதால் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், நிறைய பேட்டிகள் கொடுத்துவருகிறார். 

இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பான ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் 13வது சீசன் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இதுவரை எந்த அணியிலும் இல்லாதபோதிலும், இந்த ஐபிஎல்லில் ஆடும் நம்பிக்கையில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்ரோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படும் என தெரிகிறது. வரும் செப்டம்பரில் தான் ஸ்ரீசாந்த் மீதான தடை முடிகிறது. ஆனாலும் அவர் இந்த முறையே ஐபிஎல்லில் ஆடும் நம்பிக்கையில் உள்ளார். 

ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் குறித்து பேசிய ஸ்ரீசாந்த், ஐபிஎல்லில் எந்த அணி ஏலத்தில் எடுத்தாலும் அதில் அதில் ஆட தயாராக இருக்கிறேன். 2021 ஐபிஎல்லுக்கான ஏலத்தில் நான் இடம்பெறுவேன். 2020 ஐபிஎல்லில் கூட நான் ஆட வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக ஆடவில்லையென்றால், அதிகமான இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்., அப்படி பார்த்தால், எனக்கும் வாய்ப்பிருக்கிறது என்றார் ஸ்ரீசாந்த்.