நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 10 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும்.

WPL 2023 Auction: ஏலத்தில் விலைபோகாத 5 பெரிய வீராங்கனைகள்

குரூப் ஏ - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் 
குரூப் பி - இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து

இதில், நேற்று நடந்த குரூப் பி பிரிவுகளுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டிரையன் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா

இதையடுத்து, எளிய இலக்கை நோக்கிய ஆடிய நியூசிலாந்து பெண்கள் அணியில் ஒவ்வொருவரும் 0, 10, 12, 1, 4, 7 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் எம்லாபா 3 விக்கெட்டுகளும், காப் மற்றும் டிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இங்கிலாந்தின் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!

இதற்கு முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை தழுவியது. குரூப் ஏ பிரிவில் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணியும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளன. இன்று நடக்கும் 8 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச பெண்கள் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.