தென்னாப்பிரிகா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடைசியாக விளையாடிய டெஸ்ட் அணியில் இருந்து இரண்டு மாற்றங்களுடன் இந்தியா களமிறங்குகிறது. காயத்தால் வெளியேறியிருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார், அக்சர் படேலும் அணிக்கு திரும்பியுள்ளார். துருவ் ஜுரெல் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள். பேட்டிங் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் நான்காவது இடத்திலும், ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்திலும் களமிறங்குவார்கள்.

தென்னாப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஆடும் லெவனில் இல்லை. அவருக்கு பதிலாக கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2015-க்குப் பிறகு இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா டாஸ் வெல்வது இதுவே முதல் முறை.

Scroll to load tweet…

தென்னாப்பிரிக்கா ஆடும் லெவன்: எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் மல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ்.

இந்தியா ஆடும் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.