Asianet News TamilAsianet News Tamil

#T20WorldCup ஆஸ்திரேலிய பவுலர்கள் அபாரமான பவுலிங்..! மிகக்குறைவான ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணியை வெறும் 118 ரன்களுக்கு சுருட்டி, 119 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டுகிறது ஆஸ்திரேலிய அணி.
 

south africa set very easy target to australia in t20 world cup match
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Oct 23, 2021, 5:30 PM IST

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். ஆஸ்திரேலியா பவுலர்களான பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா ஆகிய அனைவருமே அருமையாக பந்துவீசி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள்  பவுமா(12) மற்றும் டி காக்(7) ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் வெளியேற, அவர்களை தொடர்ந்து வாண்டர் டசன்(2), ஹென்ரிச் கிளாசன்(13), டேவிட் மில்லர்(16) ஆகிய முக்கியமான மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மார்க்ரமும் 40 ரன் அடித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 20 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே அடித்தது தென்னாப்பிரிக்க அணி. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட், ஸ்டார்க் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

119 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவருகிறது ஆஸ்திரேலிய அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios