இனிமே தான் என்னுடைய ஆட்டத்தை பார்ப்பீங்க – டி20 கிரிக்கெட் ஓய்வு குறித்து டேவிட் மில்லர் விளக்கம்!

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஓய்வு பெற்றுவிட்டதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

South Africa Player David Miller Gives Explanation about his T20 Cricket Retirement News rsk

பார்படாஸில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற தென் ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி சென்ற நிலையில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லரது விக்கெட் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்து கண்ணீருடன் வெளியேறியது. குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்த டேவிட் மில்லர் கதறி கதறி அழுதார். அப்போது அவரை கட்டியணைத்து அவரது மனைவி ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் தான் டேவிட் மில்லர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு அறிவிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணிக்காகவே தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன். எனது சிறப்பான ஆட்டம் இனிமேல் தான் வரப் போகிறது என்று கூறியுள்ளார். இதுவரையில் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மில்லர், 2439 ரன்கள் எடுத்துள்ளார்.

South Africa Player David Miller Gives Explanation about his T20 Cricket Retirement News rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios