Asianet News TamilAsianet News Tamil

பெரிய தப்பு பண்ணிட்டோம்.. புலம்பித்தள்ளிய கோச்

இந்திய பேட்ஸ்மேன்களின் திறமையை பரிசோதிக்கும் விதமாகவும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் தென்னாப்பிரிக்க பவுலர்கள் பந்துவீசவில்லை. 

south africa coach enoch nkwe feels their bowlers did not bowl upto their mark
Author
Pune, First Published Oct 12, 2019, 4:22 PM IST

புனேவில் கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ளமுடியாமல் முதல் 5 விக்கெட்டுகளை 53 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான புனே ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்களே சோபிக்காதபோது, ஸ்பின்னர்கள் என்ன செய்திருக்க போகிறார்கள். ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலர்கள் இருதரப்புமே சோபிக்கவில்லை. ஆனால் இந்திய பவுலர்களோ, இருதரப்புமே அசத்திவருகின்றனர். 

முதல் 5 விக்கெட்டுகளை ஃபாஸ்ட் பவுலர்கள் வீழ்த்த, அடுத்த 3 விக்கெட்டுகளை ஸ்பின் பவுலர்கள் தான் வீழ்த்தினர். உலகின் டாப் பவுலர்களில் ஒருவரான ரபாடா, அனுபவம் வாய்ந்த ஃபிளாண்டர் ஆகியோரின் மிரட்டலான வேகத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய சிரமமே இல்லாமல் சிறப்பாக ஆடினர். ஆனால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறினர். 

south africa coach enoch nkwe feels their bowlers did not bowl upto their mark

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக ஆடுகளமாக இருந்தும் கூட, நல்ல ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருந்தும் கூட, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாததற்கு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் எனோச் நிக்வி வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய நிக்வி, இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தவிட்டதற்கு நாங்கள் எங்களைத்தான் குறைசொல்லிக்கொள்ள வேண்டும். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக இருந்தும்கூட, எங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. ஸ்டம்புக்கு நேராக அதிகமாக வீசாமல், சற்று வைடாக வீசிவிட்டனர். இந்திய பேட்ஸ்மேன்களை போதுமான அளவிற்கு பரிசோதிக்கவில்லை. இந்திய பேட்ஸ்மேன்களை ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆட விட்டுவிட்டோம் என்று நிக்வி வருத்தம் தெரிவித்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios