AUS vs SA: ஒரேயடியாக சரண்டரான ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்; நெட் ரன் ரேட்டில் தென் ஆப்பிரிக்கா நம்பர் 1 இடம்!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், 134 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் 10ஆவது லீக் போட்டி தற்போது லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு எய்டன் மார்க்ரம் 56 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜோஸ் ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். அதன் பிறகு கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு முன்வரிசை வீரர்களான மிட்செல் மார்ஷ் 7 ரன்னிலும், டேவிட் வார்னர் 13 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஜோஸ் இங்கிலிஸ் 5, கிளென் மேக்ஸ்வெல் 3, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 என்று சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் 27 ரன்களில் வெளியேற, கடைசி வரை போராடிய மார்னஸ் லபுஷேன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் ஹசல்வுட் 2 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக ஆஸ்திரேலியா 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 177 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2ஆவது தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!
- AUS vs SA live
- AUS vs SA live match world cup
- AUS vs SA live streaming
- Australia vs South Africa cricket world cup
- Australia vs South Africa live
- Australia vs South Africa world cup 2023
- CWC 2023
- David Warner
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC cricket world cup 2023
- Kagiso Rabada
- Marnus Labuschagne
- Pat Cummins
- Temba Bavuma
- World Cup 2023 fixtures
- World cup cricket live scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets
- watch AUS vs SA live
- world cup AUS vs RSA venue
- Keshav Maharaj