Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையை ஜெயிக்க இந்திய அணி என்ன செய்யணும்..? பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுரை

டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்யவேண்டும், எப்படி ஆட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
 

sourav ganguly advises team india that what to do to win t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 17, 2021, 5:16 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இன்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. வரும் 24ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 24ம் தேதி நடக்கும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படவுள்ளார். தோனியின் ரோல் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. இளம் வீரர்களுக்கு தோனி பெரும் உதவியாக இருப்பார்.

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், அது அவ்வளவு எளிதல்ல என்று கூறியுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டி20 உலக கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதையும் படிங்க - இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகுறீங்களா..? பிசிசிஐயின் ஆஃபரை நிராகரித்த ரிக்கி பாண்டிங்

இதுகுறித்து பேசியுள்ள சௌரவ கங்குலி, அவ்வளவு எளிதாக சாம்பியன் ஆகிவிட முடியாது. பிராசஸ் மிகமுக்கியம். இந்திய வீரர்கள் அவர்களது முதிர்ச்சியை காட்ட வேண்டும். இந்திய அணி திறமையான வீரர்களால் நிரம்பியிருக்கிறது. திறமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. டி20 உலக கோப்பையை வெல்ல ஒரே விஷயம் என்ன செய்ய வேண்டுமென்றால், மனதளவில் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்தி சிறப்பாக ஆட வேண்டும். அப்போதுதான் ஃபைனலுக்கு செல்ல முடியும். ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்வதை பற்றி யோசிக்கக்கூடாது.  அடுத்து எதிர்கொள்ளப்போகும் பந்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். ஃபைனல் வரை இதில் கவனம் செலுத்தினால் கோப்பையை ஜெயிக்கலாம் என்று கங்குலி கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios