Asianet News TamilAsianet News Tamil

2வது இன்னிங்ஸிலும் சதத்தை நோக்கி ஸ்மித்.. வலுப்பெறும் ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறுகிறது. 

smith playing well in second innings also against england in ashes
Author
England, First Published Aug 4, 2019, 4:25 PM IST

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின், வார்னர், பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, டிம் பெயன் ஆகியோர் ஏமாற்ற, முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தின் பொறுப்பான சதத்தால் ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்தது. 

ஸ்மித் மட்டுமே 144 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்தே வெறும் 140 ரன்கள் தான் எடுத்திருந்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பர்ன்ஸின் சதம் மற்றும் ரூட், ஸ்டோக்ஸின் பொறுப்பான அரைசதங்களால் முதல் இன்னிங்ஸீல் 374 ரன்களை குவித்தது. 

முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணியை விட 90 ரன்கள் முன்னிலையில் முடிந்தது. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் பான்கிராஃப்ட்டும் மீண்டும் சொதப்பினர். இரண்டாவது இன்னிங்ஸிலும் இருவரும் சோபிக்கவில்லை. வார்னர் 8 ரன்களிலும் பான்கிராஃப்ட் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

smith playing well in second innings also against england in ashes

அதன்பின்னர் ஸ்மித்துடன் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த உஸ்மான் கவாஜா 40 ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், முதல் இன்னிங்ஸை போலவே ஸ்மித்துடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க உதவுகிறார். மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்திருந்தது. ஸ்மித் 46 ரன்களுடனும் ஹெட் 21 ரன்களும் களத்தில் இருந்தனர். 

நான்காம் நாள் ஆட்டத்தை ஸ்மித்தும் ஹெட்டும் தொடர்ந்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித், இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பிறகும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து தனது வழக்கமான இன்னிங்ஸை ஆடிவருகிறார் ஸ்மித். சதத்தை நோக்கி ஸ்மித் பயணித்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஹெட்டும் சிறப்பாக ஆடிவருகிறார். ஸ்மித் - ஹெட் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிவருகிறார்கள். இந்த ஜோடி தொடர்ந்து நீடித்தால் இங்கிலாந்து அணிக்கு பெரும் பிரச்னையாக அமைந்துவிடும். 

Follow Us:
Download App:
  • android
  • ios