Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த சிராஜ்.. வார்னரின் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்த ஷமி! அலறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தனது முதல் பந்திலேயே உஸ்மான் கவாஜை வீழ்த்தி முகமது சிராஜ் பிரேக் கொடுத்தார்.
 

siraj and shami got australia top order batsmen wickets in first test held at nagpur
Author
First Published Feb 9, 2023, 10:05 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார். 

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டி டாஸ் ரிப்போர்ட்! இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்; 3 ஸ்பின்னர்கள் யார் யார்?

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, ஸ்காட் போலந்த்.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். அதனால் ஸ்பின்னை எதிர்கொள்வதுதான் சவால் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்திய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை பெரியளவில் சீரியஸாக எடுக்கவில்லை. அவர்களின் கவனம் ஸ்பின்னர்கள் மீது இருந்த நிலையில், இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் ஷமியும் சிராஜும் சர்ப்ரைஸ் செய்தனர்.

ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷமி வீசினார். 2வது ஓவரை வீசிய சிராஜ், முதல் பந்திலேயே உஸ்மான் கவாஜாவை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அதை ரிவியூ செய்தார். ரிவியூவில் அவுட் உறுதியானதால் கவாஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஆஃப் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்தார் ஷமி. வார்னரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 2 ரன்னுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்துவிட்டது.

ஸ்டீவ் ஸ்மித்தும் மார்னஸ் லபுஷேனும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios