Asianet News TamilAsianet News Tamil

டைவ் அடித்து கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின்; அப்படியிருந்தும் தோல்வி அடைந்த சீகம் மதுரை பாந்தர்ஸ்!

சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியின் வீரர் முருகன் அஸ்வின் டைவ் அடித்து பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Siechem Madurai Panthers Player Murugan Ashwin Catch Video in TNPL Goes viral in Social Media
Author
First Published Jun 19, 2023, 11:51 AM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டி திண்டுக்கல் பகுதியிலுள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்து கௌசிக் காந்தி சாதனை!

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ஷிவன் சிங், விமல் குமார், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், பி சரவணக் குமார், எஸ் அருண், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சி சரத் குமார்.

சீகம் மதுரை பாந்தர்ஸ்:

எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், எஸ் ஸ்ரீ அபிஷேக், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன், தேவ் ராகுல், குர்ஜாப்னீத் சிங்

2ஆவது தோல்வியை தழுவிய மதுரை பாந்தர்ஸ்: பாபா இந்திரஜித் அதிரடியால் திண்டுக்கல் வின்!

இதில் முதலில் ஆடிய சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 124 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அடுத்ததாக வந்த எஸ் அருண் பேட்டிங் ஆடினார். இவர், போட்டியில் 3.4ஆவது ஓவரில் குர்பாஜ்னீத் சிங் வீசிய பந்தை ஆஃப் ஸ்கொயர் திசையில் அடித்தார். அங்கு பீல்டிங் செய்து கொண்ட முருகன் அஸ்வின், டைவ் அடித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். அவர் கேட்ச் பிடிக்கும் வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுபோத் குமார் வேகத்தில் சுருண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ்: கடைசி வரை போராடிய கௌசிக்!

எனினும், இந்தப் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு முன்னதாக நடந்த பா11சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஒரே பந்தில் பேட்ஸ்மேனும், பௌலரும் மாறி மாறி டிஆர்எஸ் கேட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில், நாட் அவுட் மட்டுமே இறுதி தீர்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

ஒரேயோரு இன்ஸ்டா போஸ்டுக்கு ரூ.8.9 கோடி, டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலி!

Follow Us:
Download App:
  • android
  • ios