டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சுப்மன் கில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் நிலையில், இன்று அகமதாபாத் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிக்காக இந்திய அணி திருவனந்தபுரம் சென்றிருந்தது. நெதர்லாந்து அணிக்கு எதிரான அந்த வார்ம் அப் போட்டியானது மழையால் பாதிக்கப்படவே போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் சென்னை திரும்பினர். அப்போது சுப்மன் கில்லிற்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதில் கில்லிற்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த சுப்மன் கில் கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
18 ஒய்டா, நொந்து போன கேப்டன் ஷனாகா – தோல்விக்கு இது தான் காரணம்!
இதையடுத்து இன்று 11 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 9 ஆவது லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி டெல்லி வந்தது. அதில், சுப்மன் கில் இடம் பெறவில்லை. சுப்மன் கில்லிற்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை ஒரு மைக்ரோலிட்டருக்கு 1,00,000 க்கும் கீழே குறைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8ஆம் தேதி இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு, ஷமிக்கு வாய்ப்பு? இந்திய அணியின் பிளேயிங் 11!
ஒரே ஒரு நாள் இரவு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள ஹோட்டல் அறையில் சுப்மன் கில் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறாத சுப்மன் கில் இன்று நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இடம் பெறவும் மாட்டார்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியிருந்த நிலையில், தற்போது கில் அகமதாபாத் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால், கண்டிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் – 344 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி!
இந்த உலகக் கோப்பை 2023 சீசன் சுப்மன் கில்லிற்கு முதல் சீசன் என்பதால், இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக கில் தனது உலகக் கோப்பையின் அறிமுக போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
