உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் சுற்று முடிந்து சூப்பர் லீக் சுற்று நடந்துவருகிறது.

சூப்பர் லீக்கிற்கு மும்பை, கர்நாடகா, பெங்கால், ரெயில்வேஸ் உள்ளிட்ட அணிகள் தேர்வாகியுள்ளன. சூப்பர் லீக் சுற்றில் மும்பை அணி இன்று கர்நாடக அணியை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டுவந்தார். காயம் காரணமாக தொடரிலிருந்து ரஹானே விலகியுள்ளார். இதையடுத்து இனிவரும் போட்டிகளுக்கு அந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், ரஹானே முழு உடற்தகுதியில் இல்லாமல் இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் இருந்தார் ரஹானே. ஐபிஎல்லை தீவிரமாக நம்பியிருந்த ரஹானே, முக்கியமான நேரத்தில் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் இருக்கிறார்.

ஐபிஎல்லுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் அதற்குள் உடற்தகுதி பெறும் நம்பிக்கையில் இருக்கிறார் ரஹானே. ரஹானே விலகியுள்ளதால், சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்படுகிறார்.

மும்பை அணி:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், குல்கர்னி, சித்தேஷ் லத், ஆதித்ய டரே, சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் பர்கார், கேர்கார், துர்மில் மத்கார், ஷாம்ஸ் முலானி, ஷுப்மன் ரஞ்சனி, தேஷ்பாண்டே, ரோய்ஸ்டான் டியாஸ்.