Asianet News TamilAsianet News Tamil

ஆண்டர்சனை மட்டம்தட்ட நினைத்து அசிங்கப்பட்ட அக்தர்..! திமிரை அடக்கிய ரசிகர்கள்

600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற வரலாற்று சாதனையை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை மட்டம்தட்ட நினைத்து அசிங்கப்பட்டார் அக்தர்.
 

shoaib akhtar tried to underestimate anderson and fans retaliate in correct way
Author
Pakistan, First Published Aug 27, 2020, 10:54 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஃபாஸ்ட் பவுலராக நீண்டகாலம் ஆடுவது என்பதே மிகப்பெரிய சாதனை. ஏனெனில் ஃபாஸ்ட் பவுலர்கள் ஃபிட்னெஸை பராமரிப்பது மிகக்கடினம். மிகக்குறைவான ஃபாஸ்ட் பவுலர்களே 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளனர். அவர்களில் ஒருவர் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 

2002ம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் அணியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், 2003ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார் ஆண்டர்சன். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடுவதற்கு தனது ஃபிட்னெஸை பராமரிக்கும் விதமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து 2015ம் ஆண்டே ஒதுங்கினார். அதன்பின்னர் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். 

அதன் விளைவாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற க்ளென் மெக்ராத்தின் சாதனையை முறியடித்த ஆண்டர்சன், பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 

shoaib akhtar tried to underestimate anderson and fans retaliate in correct way

ஒரு ஃபாஸ்ட் பவுலராக இது அபார சாதனை. இதையடுத்து ஆண்டர்சனுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவரை வெகுவாக பாராட்டினர். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

அந்தவரிசையில், ஆண்டர்சனை வஞ்சப்புகழ்ச்சியாக வாழ்த்தினார் அக்தர். ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த பதிவிட்ட டுவீட்டில், 600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது அபாரமான சாதனை. மிதவேகப்பந்து வீச்சாளராக 156 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது  என்பது சாதாரண விஷயமல்ல என்று அக்தர் பதிவிட்டிருந்தார். 

 

அதாவது ஆண்டர்சன் ஒரு ஃபாஸ்ட் பவுலர் இல்லை, அவர் மிதவேகப்பந்து வீச்சாளர் தான், அதனால் தான் அவரால் இவ்வளவு நீண்டகாலம் ஆடமுடிகிறது என்று ஆண்டர்சனை மட்டம்தட்டும் வகையில் பதிவிட்டிருந்தார் அக்தர். அக்தரின் ஆணவத்திற்கு ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து அவரது மூக்கை உடைத்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios