Asianet News TamilAsianet News Tamil

ஸ்மித்தை நாலே பந்தில் தூக்கிடுவேன்.. நான் வாய் உதார் விடலடா.. இந்த வீடியோவை பாருங்க.. ஐசிசி-க்கு அக்தர் பதிலடி

ஸ்டீவ் ஸ்மித்தை நான்கே பந்தில் வீழ்த்திவிடுவேன் என்று கூறியதற்கு தன்னை நக்கலடித்த ஐசிசி-க்கு வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார் ஷோயப் அக்தர். 
 

shoaib akhtar retaliation to icc video
Author
Pakistan, First Published May 16, 2020, 3:25 PM IST

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

இந்நிலையில், அண்மையில் வாயை கொடுத்து வாங்கிக்கட்டி கொண்டார் அக்தர். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ, அண்மையில் ஒரு டுவீட் செய்திருந்தது. அதாவது, கடந்த கால பேட்ஸ்மேன்கள்/பவுலர்கள் சிலரை இந்தக்கால பவுலர்கள்/பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டால் என்ன ஆகும்? என்று ஐசிசி கேள்வியெழுப்பியிருந்தது. அதில் ஷேன் வார்ன்/ விராட் கோலி, மெக்ராத்/பாபர் அசாம், பாண்டிங்/ஜோஃப்ரா ஆர்ச்சர், சச்சின் டெண்டுல்கர்/ரஷீத் கான் எதிர்கொண்டால் எப்படியிருக்கும் என்று டுவீட் செய்திருந்தது.

shoaib akhtar retaliation to icc video

அதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பதிலளித்தனர். அந்தவகையில், ஐசிசியின் அந்த டுவீட்டிற்கு பதிலளித்த அக்தர், ஸ்டீவ் ஸ்மித்தை(சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவர்) நான்கே பந்தில் நான் வீழ்த்திவிடுவேன். முரட்டுத்தனமான மூன்று பவுன்ஸர்களை வீசி பீதியை கிளப்பி, நான்காவது பந்தில் ஸ்மித்தை வீழ்த்திவிடுவேன் என அக்தர் தெரிவித்திருந்தார். 

தன்னம்பிக்கையாலும் தன் திறமை மீதான நம்பிக்கையாலும் அக்தர் அப்படி கூறியிருந்தாலும், அது பார்ப்பவர்களுக்கு ஆணவம் மிகுந்த பேச்சாக தெரிந்ததால், ரசிகர்கள் அவரை டுவிட்டரில் கழுவி ஊற்றினர். ரசிகர்கள் மட்டுமல்லாது ஐசிசி-யே கிண்டலடித்திருந்தது. பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் புகைப்படங்களை பதிவிட்டு, அக்தரை ஏளனப்படுத்தியது. 

இந்நிலையில், ஸ்மித்தை தன்னால் வீழ்த்த முடியும் என்று கூறியது ஆணவத்தால் கூறியதோ அல்லது முடியாத காரியமோ அல்ல என்பதை தனது கெரியரில் தான் செய்த சம்பவங்களை சுட்டிக்காட்டி ஐசிசி-க்கு பதிலடி கொடுத்துள்ளார். அதற்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  

தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரயன் லாரா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் தனது பவுன்ஸரில் அடிபட்டு சுருண்ட விழுந்த காட்சிகளையும் தனது யார்க்கரில் பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பை பறிகொடுத்த காட்சியையும் உள்ளடக்கிய ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள அக்தர், வேறு ஏதாவது நல்ல மீம்ஸ்களையோ அல்லது எமோஜிக்களையோ தேடி கண்டுபிடியுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios