Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கு பொண்டாட்டி, பிள்ளைலாம் இருக்கு; அட்டாக் பண்ணாம அவுட் ஆக்கிக்க! அக்தரிடம் கெஞ்சிய இந்திய வீரர்கள்

தங்களை அவுட் வேண்டுமானாலும் ஆக்கிக்கொள்; ஆனால் உடம்பில்  தாக்காதே என்று தன்னிடம் இந்திய அணியின் டெயிலெண்டர்கள் கெஞ்சியதாக ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
 

shoaib akhtar claims that indian tailenders request him to not attack them
Author
Pakistan, First Published Aug 15, 2020, 5:14 PM IST

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்‌ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர். 

தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர். 

shoaib akhtar claims that indian tailenders request him to not attack them

அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள அக்தர், சிறந்த பேட்ஸ்மேன்களையே தனது பவுன்ஸர்கள் மற்றும் மிரட்டலான பவுலிங்கால் தெறிக்கவிட்டவர். அப்படியிருக்கையில், எதிரணியின் டெயிலெண்டர்களை எப்படி மிரட்டியிருப்பார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

அப்படி, சில டெயிலெண்டர்கள், அவரிடம் அவுட் வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள்; ஆனால் உடலில் தாக்கிவிடாதீர்கள் என்று கெஞ்சியதாக அக்தர் தெரிவித்துள்ளார். 

shoaib akhtar claims that indian tailenders request him to not attack them

யூடியூப் ஷோ ஒன்றில் இதுகுறித்து பேசிய அக்தர், கவுண்டி கிரிக்கெட்டில் வோர்செஸ்டெர் அணியில் ஆடியபோது, நிறைய வீரர்கள் என்னுடைய பவுலிங்கில் தாறுமாறாக அடிவாங்கினர். அடக்கடவுளே, நான் ஏதோ தவறு செய்துவிட்டேன் என்று நான் நினைத்தேன். அதுமாதிரி நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.  என்னுடைய பவுலிங்கில் அடி விழுந்துவிடுமோ என சிலர் பயப்படுவார்கள். முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய டெயிலெண்டர்கள் பலரும் பயந்தார்கள். என்னிடம் வந்து, அவுட் வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள்; ஆனால் உடம்பில் தாக்கிவிடாதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார்கள். எங்களுக்கு மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள். எங்கள் பெற்றோர்கள் நாங்கள் அடிவாங்குவதை விரும்புவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios