Asianet News TamilAsianet News Tamil

NZ vs IND: 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்கியது ஏன்..? ஷிகர் தவான் விளக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய சஞ்சு சாம்சனை 2வது போட்டியில் உட்காரவைத்தது ஏன் என இந்திய ஒருநாள் அணியின் பொறுப்பு கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார்.
 

shikhar dhawan explains why sanju samson dropped in second odi against new zealand
Author
First Published Nov 27, 2022, 5:08 PM IST

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று மழையால் ரத்தானது. எனவே இந்திய அணி கடைசி போட்டியில் ஜெயித்தாலும், தொடரை சமன் தான் செய்யமுடியுமே தவிர வெல்ல முடியாது. ஆனால் நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் ஜெயித்தால் தொடரை வென்றுவிடும்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்காததே அநீதி என ரசிகர்கள் கொந்தளித்தனர். திறமையான வீரரான சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்தன. அதன்விளைவாக முதல் ஒருநாள் போட்டியில் அவரை ஆடவைத்தனர். அந்த போட்டியில் நன்றாக ஆடி 36 ரன்கள் அடித்தார். ஆனால் எந்த தவறுமே செய்யாத சஞ்சு சாம்சனை வழக்கம்போலவே மீண்டும் புறக்கணித்தது இந்திய அணி நிர்வாகம். சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவை சேர்த்தனர்.

NZ vs IND: 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு..! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த ரசிகர்கள்

ரிஷப் பண்ட் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எவ்வளவு மோசமாக ஆடினாலும் அவருக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. 

சஞ்சு சாம்சனை உட்காரவைத்த அதிருப்தியில் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாகவும், இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர். மேலும் சஞ்சு சாம்சனை உட்காரவைத்ததால் தான், இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதாகவும், இதுதான் கர்மா என்றும் ரசிகர்கள் விளாசிவருகின்றனர். 

இந்நிலையில், சஞ்சு சாம்சனை நீக்கியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்த ஷிகர் தவான், 6வது பவுலர் தேவை என்பதற்காக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார் என்றார் ஷிகர் தவான்.

உலக கோப்பையை ஜெயிக்கணும்னா ஐபிஎல்லில் ஆடாதீங்க..! ஒரே போடாய் போட்ட ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர்

தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்கலாமே என்பதுதான் ரசிகர்களின் கருத்து.
 

Follow Us:
Download App:
  • android
  • ios