இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது. அதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கான்பெராவில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். ஐபிஎல்லில் அபாரமாக ஆடி, அதிக ரன் அடித்த 2வது வீரராக சீசனை முடித்ததாலும், ரோஹித் சர்மா இல்லாததாலும் தொடக்க வீரராக வாய்ப்பு பெற்ற தவான், ஒருநாள் தொடரிலும் பெரிதாக அசத்தாத நிலையில், இந்த போட்டியிலும் ஆறு பந்தில் வெறும்  ஒரு ரன்னுக்கு நடையை கட்டினார்.

முதல் 2 ஓவர்களை தட்டுத்தடுமாறி தாக்குப்பிடித்த தவான், மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ஆட்டமிழந்தார். தனது மிரட்டலான வேகத்தின் மூலம் தவானின் ஆஃப் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்து ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஸ்டார்க்.

இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கோலியை 9 ரன்களுக்கு மிட்ச் ஸ்வெப்சன் வீழ்த்த, 7வது ஓவரில் 48 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. மிகவும் சாதாரண பந்திற்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார் கோலி. இதுமாதிரியான பந்துகளுக்கெல்லாம் அவுட்டாகும் ஆளே கிடையாது கோலி. ஆனால் ஃபார்மில் இல்லாத கோலி, ஸ்வெப்சனின் நார்மலான பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

4ம் வரிசை வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சனை 23 ரன்களுக்கு ஹென்ரிக்ஸ் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடும் ராகுல் அரைசதம் அடித்தார். ராகுலுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.