இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெராவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தவானும் கில்லும் தொடக்க வீரர்களாக இறங்கினர். முதல் 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் மிகச்சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அந்தளவிற்கான தொடக்கத்தை இந்திய தொடக்க வீரர்கள் முதல் 2 போட்டிகளிலும் அமைத்து கொடுக்கவில்லை.

முதல் 2 போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி, இன்றைய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 2வது பேட்டிங் ஆடி இலக்கை விரட்டும்போதுதான் பெரிய தொடக்கம் அமையவில்லை என்றால், இன்று முதலில் பேட்டிங் ஆடும்போதும் பெரிய தொடக்கம் அமையவில்லை. 

ஷிகர் தவானும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில், தவானை ஆறாவது ஓவரிலேயே வெறும் 16 ரன்களுக்கு வீழ்த்தினார் சீன் அபாட். அணியின் ஸ்கோர் வெறும் 26 ரன்களாக இருந்தபோதே, தவான் அவுட்டாகிவிட்டார். கில்லும் 33 ரன்களில் ஆட்டமிழக்க, கோலியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.