ஐபிஎல்லில் எதிரெதிர் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இந்த சீசனில் நான்காவது முறையாக இறுதி போட்டியில் மோதின. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, டி காக்கின் அதிரடியான தொடக்கம், பொல்லார்டின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் 20 ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தது. 

150 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியை பும்ரா மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் இணைந்து கட்டுப்படுத்தினர். இருவரும் சேர்ந்து வீசிய 8 ஓவரில் வெறும் 28 ரன்கள் மட்டுமே வழங்கினர். கடைசி ஓவரை மலிங்கா அபாரமாக வீசியதால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

டெல்லிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் முரளி விஜய்க்கு பதிலாக சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட ஷர்துல் தாகூர் சரியாக வீசவில்லை. ஒரே ஓவர் மட்டுமே வீசி 13 ரன்களை விட்டுக்கொடுத்ததால் அதன்பின்னர் அவருக்கு தோனி பவுலிங்கே கொடுக்கவில்லை. அவரது பவுலிங்கும் அந்தளவிற்கு சிறப்பாகவெல்லாம் கிடையாது. தவறான லைன் அண்ட் லெந்த்தில் போட்டு அடி வாங்குகிறார். 

அதனால் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாகூர் எடுக்கப்படமாட்டார் என்றே கருதப்பட்டது. ஆனால் ஹைதராபாத் ஆடுகளத்தின் தன்மையை கருத்தில்கொண்டு கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் வேண்டும் என்பதற்காக அவர் இறுதி போட்டியில் ஆடினார். 

நேற்றைய போட்டியிலும் பவர்பிளேயில் ஷர்துல் தாகூரின் பந்தில் ரோஹித்தும் டி காக்கும் அடித்து ஆடினர். தாகூர் வீசிய 5வது ஓவரின் 4வது பந்தில் அபாரமான சிக்சர் ஒன்றை அடித்தார் டி காக். ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் டி காக். அடுத்த பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று, டைமிங் மிஸ் ஆனதால் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி காக்கை அவுட்டாக்கிய தாகூர், அவரை நோக்கி கையை ஆட்டி ஆக்ரோஷமாக விக்கெட்டை கொண்டாடினார். இதனால் எதிர்முனையில் இருந்த மும்பை கேப்டன் ரோஹித் அதிருப்தியடைந்தார். 

தாகூரின் செயலால் ரோஹித் அதிருப்தியடைந்ததை அடுத்து, அம்பயர் தாகூரை அழைத்து, ஓவரா ஆடாமல் கொஞ்சம் அடங்கும்படி அட்வைஸ் செய்தார். இந்த சீசனில் தாகூருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கிடைத்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை. அதனால்தான் ஒரு விக்கெட் விழுந்ததுமே ஓவரா ஆட்டம்போட்டுவிட்டார் போலும்.