Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய ஷர்துல் தாகூர்.. மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்க பேட்டிங் ஆர்டரை சரித்துவருகிறார்.
 

shardul thakur turns the match of india vs south africa first test with 3 wickets
Author
Johannesburg, First Published Jan 4, 2022, 4:12 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையே ஜோஹன்னஸ்பர்க்கில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் மட்டுமே அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 50 ரன்கள் அடித்தார். மயன்க் அகர்வால் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். புஜாரா (3), ரஹானே (0) ஆகிய இரு சீனியர் வீரர்களும் சொதப்பினர். ஹனுமா விஹாரி 20 ரன்களும், ரிஷப் பண்ட் 17 ரன்களும் மட்டுமே அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் அபாரமாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரமை 7 ரன்னுக்கு வெளியேற்றினார் ஷமி. அதன்பின்னர் கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். எல்கரும் பீட்டர்சனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள் இருவரும், பும்ரா, ஷமி ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு கவனமாக ஆடினர். அதனால் எல்கர்  - பீட்டர்சன் ஜோடியை பிரிப்பது சவாலான காரியமாக இருந்தது. இதுபோன்ற பெரிய பார்ட்னர்ஷிப்பை பிரிப்பதில் வல்லவரான ஷர்துல் தாகூர் பவுலிங் போட வந்தார். அவரது 2வது ஓவரிலேயே எல்கரை 28 ரன்னில் வெளியேற்றி பிரேக் கொடுத்தார். களத்தில் நங்கூரமிட்டு அரைசதம் அடித்திருந்த பீட்டர்சனையும் 62 ரன்னில் வீழ்த்தினார் தாகூர். வாண்டெர் டசனை வெறும் ஒரு ரன்னில் வீழ்த்தி முதல் செசனை முடித்தார் தாகூர். முதல் செசன் முடியும் தருவாயில் டசனை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

2ம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios