மும்பை அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஹேனா விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Shardul Thakur Appointed Mumbai Captain: மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரஹானே பதவியில் இருந்து திடீரென விலகினார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அடுத்த கேப்டனை உருவாக்கவும் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஹானே கூறினார். இந்நிலையில், மும்பை அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அணி கேப்டன் ஷர்துல் தாக்கூர்

கேப்டன் பதவியில் இருந்து விலகிய அஜிங்க்யா ரஹானேவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை மும்பை அணித் தலைவராகத் தேர்வு செய்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த உள்ளூர் சீசனில் ரஞ்சி டிராபி, முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபிகளில் ஷர்துல் மும்பை அணியை வழிநடத்துவார். ஆனால் 33 வயதான ஷர்துல் தாக்கூரை மும்பை அணித் தலைவராகத் தேர்வு செய்தது எதிர்பாராதது.

ஷர்துலை கேப்டனாக தேர்வு செய்தது ஏன்?

ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களில் ஒருவரை கேப்டன் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்ஃபராஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியிலும் பரிசீலிக்கப்படுவதால், சீசன் முழுவதும் அவர்களின் சேவை கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இதனால்தான் ஷர்துல் தாக்கூரை கேப்டனாகத் தேர்வு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to load tweet…

மும்பை அணியில் கலக்கும் ஷர்துல் தாக்கூர்

கடந்த ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக ஒரு சதம் உட்பட 505 ரன்கள் எடுத்த ஷர்துல், 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பந்துவீச்சிலும் அசத்தினார். ரஞ்சியில் அவர் செய்த சிறப்பான ஆட்டத்தால் ஐபிஎல்லில் லக்னோ அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய ஷர்துல், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த மாத இறுதியில் தொடங்கும் துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாகவும் ஷர்துல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.