Asianet News TamilAsianet News Tamil

நான் ஆடுனதுலயே எனக்கு ரொம்ப புடிச்ச கேப்டன்கள் இவங்கதான்.. ஷேன் வாட்சன் சொன்னதில் 2 பேர் இந்தியர்கள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், தான் ஆடியதிலேயே தனக்கு பிடித்த கேப்டன்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
 

shane watson names his favourite captains that he was playing under
Author
Australia, First Published Jan 24, 2020, 10:12 AM IST

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். 2002ம் ஆண்டு பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான அவர், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணியில் ஆடியுள்ளார். அவரே கூட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 

மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாட்சன், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே ஆகிய அணிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல்லில் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஷேன் வாட்சன், முதல் ஐபிஎல் டைட்டிலை ராஜஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதன்பின்னர் ராகுல் டிராவிட் தலைமையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடினார். 

Also Read - ரோஹித் - கோலிக்கு கடும் சவால்.. கோலி கஷ்டப்படுவதை பார்க்க குஷியா ரெடியான கோச்

shane watson names his favourite captains that he was playing under

2008லிருந்து 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய வாட்சன், 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் ஆடினார். அதன்பின்னர் அந்த அணியால் கழட்டிவிடப்பட்ட வாட்சன், 2018 மற்றும் 2019 சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக ஆடினார். அடுத்த சீசனுக்கும் சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு சர்வதேச அளவில் பாண்டிங், வார்னே, ராகுல் டிராவிட், தோனி, ஸ்மித், விராட் கோலி, மைக்கேல் கிளார்க் என பல கேப்டன்களின் கேப்டன்சியின் கீழ் ஆடிய வாட்சன், அவருக்கு பிடித்த கேப்டன்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20.. விக்கெட் கீப்பர் ராகுல், 6 பவுலர்கள்.. உத்தேச இந்திய அணி  

shane watson names his favourite captains that he was playing under

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வாட்சன், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், தோனி ஆகிய நால்வரும் தனக்கு மிகவும் பிடித்த கேப்டன்கள் என்று கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios