Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்து ஏ அணியிடம் படுமட்டமா தோற்ற பாகிஸ்தான்..! ஷாஹித் அஃப்ரிடி ரியாக்‌ஷன்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி படுமட்டமாக தோற்றது குறித்து ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார்.
 

shahid afridi reaction on pakistan defeat against england in first odi
Author
Cardiff, First Published Jul 9, 2021, 9:50 PM IST

பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. கார்டிஃபில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 2ம் தர அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. 

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மெயின் அணி, சில பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதன் விளைவாக மெயின் அணி முழுவதுமாக மாற்றப்பட்டு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் நிறைய புதுமுகங்களுடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

முன்னணி வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியிடம் படுமோசமாக தோற்றது பாகிஸ்தான். முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 47 ரன்கள் அடித்தார். ஷதாப் கான் 30 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களுமே சொதப்பினர்.

இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் ஆகிய 2 முக்கிய வீரர்களும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகினர். முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், மக்சூத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதையடுத்து 36 ஓவரில் வெறும் 141 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி. 142 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இந்த படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாஹித் அஃப்ரிடி, இந்த போட்டியை விரைவில் நாம் மறந்தாக வேண்டும். பாகிஸ்தான் அணி இந்த தோல்வியை படுமோசமாக நினைக்காது. பாய்ஸ், வலுவாக கம்பேக் கொடுத்து சனிக்கிழமை லார்ட்ஸில் நடக்கும் போட்டியில் அசத்துங்கள். புது அணியை வைத்துக்கொண்டு அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios