Pakistan vs Bangladesh, Shaheen Afridi: முகமது ஷமி, டிரெண்ட் போல்ட் சாதனையை முறியடித்த ஷாகீன் அஃப்ரிடி!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

Shaheen Afridi Breaks Mohammed Shami and Trent Bolt 100 Wickets Record in ODI Matches During PAK vs BAN 31st Match at Kolkata rsk

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 31ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வங்கதேச அணியைப் பொறுத்த வரையில் தவ்ஹீத் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Pakistan vs Bangladesh: ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷாகீன் அஃப்ரிடி சாதனை!

இதே போன்று பாகிஸ்தான் அணியிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இமாம் உல் ஹக், ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, ஃபகர் ஜமான், அகா சல்மான் மற்றும் உசாமா மிர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஷாகீன் அஃப்ரிடி வீசினார். அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 5ஆவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் தன்ஷித் ஹசன் ஆட்டமிழந்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் – டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!

இதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஷாகீன் அஃப்ரிடி படைத்துள்ளார். இதில் 51 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (56 போட்டிகள்), நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் (56 போட்டிகள்) ஆகியோரது 100 விக்கெட்டுகள் சாதனையை குறைவான போட்டிகள் மூலமாக முறியடித்துள்ளார்.

Ballon d'Or Award: 8ஆவது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஆர் விருது வென்ற மெஸ்ஸி!

51 – ஷாகீன் அஃப்ரிடி

52 – மிட்செல் ஸ்டார்க்

54 – ஷேன் பாண்ட்

54 – முஷ்தாபிஜூர் ரஹ்மான்

55 – பிரெட் லீ

56 – டிரெண்ட் போல்ட்

56 – முகமது ஷமி

இதற்கு முன்னதாக நேபாள் வீரர் சந்தீப் லமிச்சனே 42 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். இதே போன்று ரஷீத் கான் 44 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மிட்செல் ஸ்டார் 51 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios