Ballon d'Or Award: 8ஆவது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஆர் விருது வென்ற மெஸ்ஸி!

உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ஆர் விருதை 8ஆவது முறையாக வென்று கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

Lionel Messi won the Ballon d'Or award for the best football player for the 8th time rsk

கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் கால்பந்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பிரெஞ்சு கால்பந்து இதழான பிரான்ஸ் ஃபுட்பால் விருது வழங்கி வருகிறது. அதில் உயரிய விருதாக கருதப்படுவது பலோன் டி ஆர் விருது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆண்கள் பிரிவில் 30 பேர் இடம் பெற்றிருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூலை வரையில் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து தேர்வு நடந்துள்ளது.

IND vs ENG: 5ஆவது முறையாக 1000 ரன்களை கடந்த சாதனை மன்னன் ஹிட்மேன் ரோகித் சர்மா!

அதன்படி முன்னணி கால்பந்து வீரர்களான கெவின் டி ப்ரூய்ன், லியோனல் மெஸ்ஸி, ஹாலண்ட், எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்தனர். இதில் அர்ஜெடினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டிற்கான பலோன் டி ஆர் விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக 8ஆவது முறையாக மெஸ்ஸி இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

Womens Asian Champions Trophy:மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – சீனாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி!

முதல் முறையாக கடந்த 2009 ஆம் ஆண்டு மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு பின் 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். இதன் மூலமாக அதிக முறை இந்த விருதை வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தும் முகமது ஷமி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios