Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் செய்.. கெய்லை தட்டி தூக்கிடலாம்..! இந்திய ஸ்பின்னருக்கு தோனி சொன்ன தரமான ஐடியா

கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தோனி கொடுத்த ஆலோசனையை நினைவுகூர்ந்துள்ளார் இந்திய ஸ்பின் பவுலர் ஷபாஸ் நதீம். 
 

shahbaz nadeem reminds how dhoni advise useful to get chris gayle wicket in ipl
Author
Chennai, First Published Jun 26, 2020, 2:33 PM IST

கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தோனி கொடுத்த ஆலோசனையை நினைவுகூர்ந்துள்ளார் இந்திய ஸ்பின் பவுலர் ஷபாஸ் நதீம். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தோனி, எதிரணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை ஸ்டம்ப்புக்கு பின்னால் நின்று உற்று கவனிப்பதால், எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி வீசினால் அவரை வீழ்த்தலாம் என்று தெரிந்தவர். அந்தவகையில், தோனியின் ஆலோசனையை கேட்டு அதன்படி செயல்பட்டு வளர்ந்தவர்கள் தான் இப்போதைய ஸ்பின்னர்களான குல்தீப்பும் சாஹலும். 

தோனி சொல்லும் ஆலோசனையை கேட்டு ஸ்பின்னர்கள் அதன்படி செயல்பட்டாலே போதும். அந்தளவிற்கு துல்லியமான ஆலோசனைகளை வழங்கக்கூடியவர் தோனி. அந்தவகையில், கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என தோனி தனக்கு கூறிய ஆலோசனையை வெளியிட்டுள்ளார். 

shahbaz nadeem reminds how dhoni advise useful to get chris gayle wicket in ipl

இந்திய அணிக்காக நதீம் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். ஐபிஎல்லில் 2011லிருந்து 2018 வரை டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிய நதீம், 2019 சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடினார். 

2017 ஐபிஎல்லில் ஆடுவதற்கு முந்தைய விஜய் ஹசாரே டிராபி தொடரின் போது, ஜார்கண்ட் அணியில் ஆடிய நதீமிற்கு தோனியுடன் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில், கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று கேட்டதற்கு, தோனி கூறிய ஆலோசனையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நதீம். 

ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ­­­இடது கை ஆஃப் ஸ்பின்னரான அவர் சைனாமேன் பவுலிங் போட ஆரம்பித்தது குறித்து பேசினார். அப்போதுதான் தோனியின் ஆலோசனை குறித்தும் பகிர்ந்துகொண்டார். 

shahbaz nadeem reminds how dhoni advise useful to get chris gayle wicket in ipl

இதுகுறித்து பேசிய நதீம், நான் கெய்லுக்காகத்தான் சைனாமேன் பவுலிங்கே கற்றுக்கொண்டேன். ஐபிஎல்லில் கெய்லுக்கு எதிராக நீண்டகாலமாக நான் பந்துவீசியதில்லை. இடது கை ஆஃப் ஸ்பின்னரின் பவுலிங்கை கெய்ல் அடி நொறுக்கிவிடுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் கெய்லுக்காகத்தான் ரிஸ்ட் ஸ்பின் போடவும் கற்றுக்கொண்டேன்.

தோனியுடன் விஜய் ஹசாரே தொடரில் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, இடது கை ஆஃப் ஸ்பின்னரான நான் கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தோனியிடம் கேட்டேன். அதற்கு, முதலில் நீ(நதீம்) இதுவரை கெய்லுக்கு பந்துவீசியதில்லை. நீ பந்துவீசக்கூடிய நிலை வந்தால், கெய்லை விளாசுவதற்கு ஏற்ப அவருக்கு ஈசியான ஏரியாவில் வீசிவிடக்கூடாது. பந்தை அவரிடமிருந்து நன்றாக விலக்கி வீசு அல்லது அவரது கால்காப்பை நோக்கி உள்வருமாறு வீசு. அப்படி வீசினால், அவரால் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாது; சிங்கிள் மட்டுமே எடுப்பார் என்று தோனி எனக்கு ஆலோசனை கூறினார் என்று நதீம் தெரிவித்துள்ளார்.

2017 ஐபிஎல் சீசனில், கெய்லுக்கு பந்துவீசும் வாய்ப்பை அப்போதைய டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர் கான், நதீமிற்கு வழங்க, தோனி சொன்ன ஆலோசனையை பின்பற்றி அந்த போட்டியில், தான் வீசிய மூன்றாவது பந்திலேயே கெய்லை வீழ்த்தினார் நதீம். அதையும் நினைவுகூர்ந்துள்ளார் நதீம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios